நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மதுராந்தகம் செல்லியம்மன் தேரடி தெருவைச் சேர்ந்த சீனுவாசன் மகன் ரவி, 59, என்பவர், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்தார். இதுகுறித்து, மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த மாதம் 9ம் தேதி, ரவியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்கு எஸ்.பி., சாய்பிரணீத் பரிந்துரை செய்தார்.
இதையேற்று, ரவியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் அருண்ராஜ் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, சென்னை புழல் மத்திய சிறையிலுள்ள ரவியிடம், குண்டர் சட்ட நகலை, போலீசார் நேற்று வழங்கினர்.

