/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அருங்குன்றம் குளம் துார்வாரி சீரமைப்பு
/
அருங்குன்றம் குளம் துார்வாரி சீரமைப்பு
ADDED : ஆக 10, 2025 01:00 AM

திருப்போரூர்:அருங்குன்றம் கோவில் குளம் துார்வாரி சீரமைக்கப்பட்டது.
திருப்போரூர் அடுத்த அருங்குன்றம் ஊராட்சி, மன்னவேடு தேவதானம் கிராமத்தில், 1.5 ஏக்கர் பரப்பில் முருகன் கோவில் குளம் உள்ளது. இக்குளம் ஆகாய தாமரைகள் வளர்ந்து, புதர் சூழ்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.
'ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா ' என்ற தொண்டு நிறுவனம், குளத்தை ஆழப்படுத்தி, சீரமைக்க முடிவு செய்தது.
அதன்படி குளத்தை துார்வாரி ஆழப்படுத்தி, கரையை பலப்படுத்தினர். குளத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில், தொண்டு நிறுவன அமைப்பின் நிர்வாகிகள், அருங்குன்றம் ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தொண்டு நிறுவனத்திற்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் ஊர் மக்கள் நன்றி தெரிவித்தனர்.