/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல்லுாரி மாணவியை கர்ப்பாக்கிய உதவி பேராசிரியருக்கு 'காப்பு'
/
கல்லுாரி மாணவியை கர்ப்பாக்கிய உதவி பேராசிரியருக்கு 'காப்பு'
கல்லுாரி மாணவியை கர்ப்பாக்கிய உதவி பேராசிரியருக்கு 'காப்பு'
கல்லுாரி மாணவியை கர்ப்பாக்கிய உதவி பேராசிரியருக்கு 'காப்பு'
ADDED : ஏப் 20, 2025 08:38 PM
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் - வண்டலுார் சாலை, மேலக்கோட்டையூரில், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலை உள்ளது.
இந்த பல்கலையில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார், 45, என்பவர் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், அருகே உள்ள போலீஸ் குடியிருப்பில் தங்கியுள்ளார்.
அதேபோல், அடையாறு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி ஒருவர், இதே பல்கலை விடுதியில் தங்கி, இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
மேற்கண்ட உதவி பேராசிரியரும், மாணவியும் ஓராண்டாக பழகி வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், மாணவி இரண்டு மாத கர்ப்பமானது தெரிந்துள்ளது.
இதனால், நேற்று முன்தினம் கர்ப்பத்தை கலைக்க, உதவி பேராசிரியருடன் மாணவி, கேளம்பாக்கம் அருகே படூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது, மாணவிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவமனை நிர்வாகத்தினர், கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பல்கலை இருக்கும் இடம் தாழம்பூர் போலீஸ் எல்லையில் வருவதால், தாழம்பூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
பின், தாழம்பூர் போலீசார் தனியார் மருத்துவமனைக்குச் சென்று, மாணவியை சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
உடன் இருந்த உதவி பேராசிரியரிடம் விசாரித்த போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
சந்தேகமடைந்த போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில், உதவி பேராசிரியர் ராஜேஷ்குமார், மாணவியை கர்ப்பமாக்கியது தெரிந்தது.
இதையடுத்து, உதவி பேராசிரியர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.

