/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
டாஸ்மாக் கடை ஷட்டரை உடைத்து -கொள்ளை முயற்சி
/
டாஸ்மாக் கடை ஷட்டரை உடைத்து -கொள்ளை முயற்சி
ADDED : ஏப் 16, 2025 08:15 PM
மதுராந்தகம்:மாமண்டூர் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையின் ஷட்டரை உடைத்து, மதுபானம் மற்றும் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூர் பகுதியில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே, அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள், மதுபான கடையின் ஷட்டர் கதவை உடைத்து, கடையின் உள்ளே இருந்த சிசிடிவி கேமரா மற்றும் பணம் வைக்கும் இரும்பு பெட்டகத்தை உடைத்துள்ளனர்.
இரும்பு பெட்டகம் உடைக்க முடியாததால், அதிலிருந்த பணம் தப்பியது. வழக்கம் போல, இன்று காலை பணிக்கு சென்ற பணியாளர்கள், மதுபான கடையின் ஷட்டர் உடைந்து உள்ளதை கண்டு, படாளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
படாளம் போலீசார், செங்கல்பட்டு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சோதனை நடந்தது.
மேலும், மதுபானக்கடை பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

