/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேதகிரீஸ்வரர் கோவில் இடத்தில் வேலி அமைக்கும் முயற்சி தடுப்பு
/
வேதகிரீஸ்வரர் கோவில் இடத்தில் வேலி அமைக்கும் முயற்சி தடுப்பு
வேதகிரீஸ்வரர் கோவில் இடத்தில் வேலி அமைக்கும் முயற்சி தடுப்பு
வேதகிரீஸ்வரர் கோவில் இடத்தில் வேலி அமைக்கும் முயற்சி தடுப்பு
ADDED : அக் 21, 2024 01:07 AM
திருக்கழுக்குன்றம்:ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ், திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது.
அதற்கு சொந்தமாக, அறக்கட்டளை சொத்தாக, கருணானந்த சுவாமி மடத்தின் இடம், கோவில் மலைக்குன்று அடிவாரம் அருகில், மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ளது. இவ்விடம், புல எண்கள் 587/78 முதல், 587/81 வரை, 1,945 ச.மீ., பரப்பளவில் உள்ளது.
இவ்விடத்தை தனியார் ஒருவர் தனக்கு சொந்தமானதாகவும், அதற்கான நீதிமன்ற உத்தரவு உள்ளதாகவும் கூறி, அங்குள்ள பழமையான கட்டடத்தை, கடந்த 2022 செப்., 24ல் இடித்தார்.
கட்டடத்தின் பெரும்பரப்பு பகுதி இடிக்கப்பட்ட நிலையில், கோவில் நிர்வாகத்தினர் மேலும் இடிக்காமல் தடுத்தனர். அதுமட்டுமின்றி, இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் போலீசில் புகாரும் அளித்தனர்.
கோவிக்கு சொந்தமான சொத்தாக அறிவித்து, அங்கு அத்துமீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, அப்போது எச்சரிக்கை பலகையும் அமைத்தனர்.
இடம் குறித்து விசாரணை நிலுவையில் உள்ளதாக தெரிவித்து, எவரும் ஆக்கிரமிக்கக் கூடாது என, வருவாய்த் துறையினரும் எச்சரிக்கை பலகை அமைத்தனர்.
இதுகுறித்து, ஹிந்து முன்னணி அமைப்பினரும், போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக, அன்றைய செங்கல்பட்டு சப் - கலெக்டர் சஜீவனா, கோவில் நிர்வாகத்தினர், ஹிந்து முன்னணி அமைப்பினர், ஆக்கிரமிப்பாளர் ஆகியோரிடம் விசாரித்தார்.
வருவாய்த் துறை ஆவணங்களை ஆய்விற்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார். இது தொடர்பான நடவடிக்கைகள் கிடப்பில் உள்ளன.
இந்நிலையில், தனியார் தரப்பினர் நேற்று காலை, மடத்தின் வளாக பகுதிக்கு, சிலர் கம்பி வேலி அமைக்க முயன்றனர். சில கம்பங்கள் நட்டு பணிகள் நடந்துவந்த நிலையில், கோவில் நிர்வாகத்தினர் அறிந்து, விரைந்து சென்று பணிகளை தடுத்து நிறுத்தினர்.

