/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இரணியம்மன் கோவிலுக்கு நிரந்தர இடம் வழங்கக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
இரணியம்மன் கோவிலுக்கு நிரந்தர இடம் வழங்கக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
இரணியம்மன் கோவிலுக்கு நிரந்தர இடம் வழங்கக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
இரணியம்மன் கோவிலுக்கு நிரந்தர இடம் வழங்கக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 24, 2025 03:49 AM

பெருங்களத்துார்: பெருங்களத்துார், இரணியம்மன் கோவிலுக்கு, ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி நிரந்தர இடம் வழங்கக்கோரி, பொதுமக்கள் சார்பில், நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தாம்பரத்தை அடுத்த பெருங்களத்துாரில், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, இரணியம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவில், சுற்றியுள்ள பகுதி மக்களின் குல தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் உள்ளது.
நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி இக்கோவில் உள்ளதால், குறிப்பிட்ட சில மீட்டர் துாரம், ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளது. இதனால், அங்கு நாள்தோறும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
சாலை விரிவாக்கம் செய்ய வசதியாக, இரணியம்மன் கோவிலை பின்புறம் தள்ளிவைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக அங்குள்ள தனியார் நிறுவனத்திடம், 21 சென்ட் நிலம் பெற்றுதர வேண்டும் என, கிராம மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், பின்புறம் உள்ள தனியார் நிறுவனம், 10.4 சென்ட் நிலத்தை தானமாக தர ஒப்புக்கொண்டது.
இதனால், நிலம் பெறும் விஷயம் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், இரணியம்மன் கோவிலுக்கு ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி நிரந்தர நிலம் வழங்கக்கோரியும், கேட்வே நிர்வாகம் - ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் மற்றும் வருவாய் துறையை கண்டித்தும், பொதுமக்கள் சார்பில், நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.
இரணியம்மன் கோவில் அருகே, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில், கிராம தேவதையான இரணியம்மன் கோவிலுக்கு, 21 சென்ட் நிலம் பெற்றுத்தர வேண்டும்.
கோவிலுக்கு பின்புறம் இருந்த அரசு புறம்போக்கு நிலமான 38 ஏக்கரை, 2004 க்கு பின் தனியார் நிறுவனத்திற்கு வருவாய் துறை பட்டா வழங்கியுள்ளது. அந்த நிலத்தை மீட்டு தர வேண்டும் எனவும், ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

