/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பூட்டப்பட்டுள்ள கழிப்பறை மீண்டும் திறக்க எதிர்பார்ப்பு
/
பூட்டப்பட்டுள்ள கழிப்பறை மீண்டும் திறக்க எதிர்பார்ப்பு
பூட்டப்பட்டுள்ள கழிப்பறை மீண்டும் திறக்க எதிர்பார்ப்பு
பூட்டப்பட்டுள்ள கழிப்பறை மீண்டும் திறக்க எதிர்பார்ப்பு
ADDED : நவ 24, 2025 03:09 AM

அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் பேரூராட்சியி ல், 15 வார்டுகள் உள்ளன.
இதில், முதலாவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், பேரூராட்சி அலுவலகம் அருகே, 10 ஆண்டுகளுக்கு முன் பொது கழிப்பறை கட்டப்பட்டது.
பேருராட்சி அலுவலகம், வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு வரும் மக்கள் மற்றும் அப்பகுதி வியாபாரிகள், இக்கழிப்பறையை பயன்படுத்தி வந்தனர்.
பின், சரியான பராமரிப்பு இல்லாமல், கழிப்பறை பூட்டப் பட்டுள்ளது.
கழிப்பறையின் உள்ளே மரக்கன்றுகள் முளைத்து, கழிப்பறை கட்டடம் வலுவிழந்து வருகிறது.
எனவே, பேரூராட்சி நிர்வாகத்தினர் கழிப்பறையை சுத்தம் செய்து, தண்ணீர் வசதி ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.