/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காதலுக்கு 'நோ' சொன்ன பெண்ணை மிரட்டியவர் கைது
/
காதலுக்கு 'நோ' சொன்ன பெண்ணை மிரட்டியவர் கைது
ADDED : நவ 24, 2025 02:53 AM
வண்டலுார்: வண்டலுாரில், காதலுக்கு 'நோ' சொன்ன பெண்ணை மிரட்டிய வாலிபர், போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருப்பூரைச் சேர்ந்தவர் அஸ்கர், 22. இவர் அங்கு கல்லுாரியில் படிக்கும் போது, அதே கல்லுாரியில் படித்த பெண்ணுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.
இந்நிலையில், படிப்பு முடிந்த பின், அந்த பெண்ணிற்கு சென்னை, தாம்பரத்திலுள்ள நிறுவனத்தில், கடந்தாண்டு வேலை கிடைத்துள்ளது.
இதனால், சென்னையில் தனியார் விடுதியில் தங்கி வேலை பார்த்த அந்த பெண், கடந்த ஆறு மாதங்களுக்கு முன், தன் காதலனுடன் மொபைல் போனில் பேசுவதை தவிர்த்து, காதலுக்கும் 'நோ' கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அஸ்கர், காதலிக்கும் போது அந்த பெண்ணுடன் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை வலைதளத்தில் பதிவிடுவதாக மிரட்டி உள்ளார். இதையடுத்து, வண்டலுார் ஓட்டேரி காவல் நிலையத்தில், அந்த பெண் புகார் அளித்தார். புகாரின்படி வழக்கு பதிவு செய்த போலீசார், திருப்பூர் சென்று அஸ்கரை கைது செய்து, நேற்று காலை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

