/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆட்டோ ஓட்டுநர் சங்கம் நிதியுதவி கோரி மனு
/
ஆட்டோ ஓட்டுநர் சங்கம் நிதியுதவி கோரி மனு
ADDED : அக் 06, 2025 11:27 PM
திருக்கழுக்குன்றம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிதியுதவி வழங்க கோரி, ஹிந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தினர், மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து, ஹிந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் கூறியதாவது:
தமிழகத்தில் 50 லட்சம் பேர், ஆட்டோ ஓட்டும் தொழில் செய்கின்றனர். ஆனால், ஆட்டோ கட்டணம் நீண்ட காலமாக உயர்த்தப்படவில்லை. 'ஊபர், ஓலா' உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களால், எங்கள் தொழில் பாதிக்கப்பட்டு வறுமையில் உள்ளோம்.
ஆந்திர மாநிலத்தில் ஆட்டோ, மேக்சி கேப், டாக்சி ஆகிய வாகன ஓட்டுநர்களுக்கு, ஆண்டுதோறும் தலா 15,000 ரூபாய் நிதியுதவி அளிக்கும் திட்டத்தை, அம்மாநில அரசு தற்போது துவக்கியுள்ளது. இதேபோன்ற திட்டத்தை, தமிழக அரசும் துவக்கி, எங்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும்.
இது தொடர்பாக, தமிழக அரசிடம் வலியுறுத்தி, செங்கல்பட்டு கலெக்டர் சினேகாவிடம், கோரிக்கை மனு அளித்துள்ளேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.