/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் கோவில்களில் புரட்டாசி பவுர்ணமி வழிபாடு
/
திருப்போரூர் கோவில்களில் புரட்டாசி பவுர்ணமி வழிபாடு
திருப்போரூர் கோவில்களில் புரட்டாசி பவுர்ணமி வழிபாடு
திருப்போரூர் கோவில்களில் புரட்டாசி பவுர்ணமி வழிபாடு
ADDED : அக் 06, 2025 11:27 PM
திருப்போரூர், திருப்போரூர் பகுதியிலுள்ள கோவில்களில், புரட்டாசி பவுர்ணமியை ஒட்டி, சிறப்பு வழிபாடு நடந்தது.
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மூலவர் கந்தசுவாமி, சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலில் கிருத்திகை, பவுர்ணமி மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில், கந்தசுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
அந்த வகையில் நேற்று, பவுர்ணமியை ஒட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதனால் கோவிலுக்கு, காலை முதலே பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல, இக்கோவிலின் துணை கோவிலான பிரணவமலையில் அமைந்துள்ள பாலாம்பிகை சமேத கைலாசநாதர் கோவிலிலும், பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது.
சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.
மேலும், செம்பாக்கம் பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவிலிலும், அம்மனுக்கு மஹா அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, உட்பிரகார உலா நடந்தது.
இதுமட்டுமின்றி நெல்லிக்குப்பம் வேண்டவராசி அம்மன் கோவில், தண்டலம் பெரியபாளையத்தம்மன் கோவில், செங்கண்மாலில் உள்ள செங்கண்மாலீஸ்வரர் கோவில், செம்பாக்கம் ஜம்புகேஸ்வரர் கோவில்களிலும், பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது.