/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூட்டுறவு சங்க ஊழியர்கள் செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம்
/
கூட்டுறவு சங்க ஊழியர்கள் செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம்
கூட்டுறவு சங்க ஊழியர்கள் செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம்
கூட்டுறவு சங்க ஊழியர்கள் செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 06, 2025 11:27 PM

செங்கல்பட்டு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் செந்தமிழ்ச்செல்வன் தலைமையில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் அருகில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:
பணியாளர்களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தேவையற்ற இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் உருவாக்கி, தினமும் 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும். மகளிர் பணிபுரியும் இடங்களில் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கூட்டுறவு சங்க ஊழியர்கள் பலர் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மேலும், காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.