/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சி.என்.ஜி., எரிவாயு நிலையம் அமைக்க ஆட்டோ ஓட்டுனர்கள் வேண்டுகோள்
/
சி.என்.ஜி., எரிவாயு நிலையம் அமைக்க ஆட்டோ ஓட்டுனர்கள் வேண்டுகோள்
சி.என்.ஜி., எரிவாயு நிலையம் அமைக்க ஆட்டோ ஓட்டுனர்கள் வேண்டுகோள்
சி.என்.ஜி., எரிவாயு நிலையம் அமைக்க ஆட்டோ ஓட்டுனர்கள் வேண்டுகோள்
ADDED : அக் 01, 2024 07:35 PM
மறைமலை நகர்:செங்கல்பட்டு நகர்ப்புறத்தில், 1,000த்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. பள்ளி குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் போன்றோர், அதிக அளவில் ஆட்டோக்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இவை, பெட்ரோல், டீசல், சி.என்.ஜி., எரிவாயு போன்றவை பயன்படுத்தி இயக்கப்படுகின்றன. செங்கல்பட்டு பகுதியில், சி.என்.ஜி., எரிபொருள் நிரப்பும் நிலையம் இல்லாததால், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர்.
இது குறித்து, செங்கல்பட்டு நகர ஆட்டோ ஓட்டுனர்கள் கூறியதாவது:
செங்கல்பட்டில், கடந்த 2021ம் ஆண்டு, சி.என்.ஜி., மற்றும் பெட்ரோல் வாயிலாக இயங்கக்கூடிய ஆட்டோக்கள் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, 600க்கும் மேற்பட்ட சி.என்.ஜி., ஆட்டோக்கள் உள்ளன.
அதற்கு, செங்கல்பட்டு புறவழிச்சாலை பழவேலி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில், எரிவாயு நிரப்பும் நிலையம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன், குறைந்த மின் அழுத்தம் மற்றும் மின்சாரம் சரிவர கிடைப்பதில்லை எனக்கூறி, எரிவாயு நிரப்பும் நிலையத்தை மூடி விட்டனர்.
செங்கல்பட்டு அருகில் வேறு எங்கும் எரிவாயு நிரப்பும் நிலையம் இல்லாத காரணத்தால், ஆட்டோ ஓட்டுனர்கள் 10 கி.மீ., தொலைவில் உள்ள மகேந்திரா சிட்டி, 13 கி.மீ., தொலைவில் உள்ள படாளம், மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று எரிவாயு நிரப்ப வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், நேர விரயம் ஏற்படுவதோடு, பொருளாதார ரீதியாகவும் கடுமையான இழப்பு ஏற்பட்டு வருகிறது.
பெட்ரோல் நிரப்பி இயக்கினாலும் மைலேஜ் குறைவாக கிடைக்கிறது. இதன் காரணமாக, பலர் மாதத் தவணை கட்ட முடியாமல் பாதிக்கப்பட்டு, மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர். பலர் கடனாளிகளாக மாறி வருகின்றனர்.
எனவே, செங்கல்பட்டு நகர் பகுதிகளில், சி.என்.ஜி., எரிவாயு நிரப்பும் நிலையம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

