/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தானியங்கி குப்பை அள்ளும் வாகனம் பழுதை சரிசெய்யாமல் மெத்தனம்
/
தானியங்கி குப்பை அள்ளும் வாகனம் பழுதை சரிசெய்யாமல் மெத்தனம்
தானியங்கி குப்பை அள்ளும் வாகனம் பழுதை சரிசெய்யாமல் மெத்தனம்
தானியங்கி குப்பை அள்ளும் வாகனம் பழுதை சரிசெய்யாமல் மெத்தனம்
ADDED : பிப் 20, 2025 11:49 PM

திருப்போரூர், திருப்போரூர் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இதில், 30,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பேரூராட்சி துாய்மை பணியாளர்கள் வாயிலாக தினமும், வாகனங்கள் வாயிலாக குப்பை சேகரிக்கப்படுகின்றன.
இந்நிலையில் குப்பை தொட்டியில் உள்ள குப்பையை தானியங்கி வாயிலாக அள்ளும் வாகனம் உரிய பராமரிப்பு இல்லாததால், அதன் இரண்டு டயர்கள் பஞ்சராகி உள்ளன.
இதை பேரூராட்சி நிர்வாகம் துரிதமாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இந்த வாகனம், கடந்த 5 நாட்களாக குப்பையுடன் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன் காரணமாக, குப்பை அள்ளும் பணி பாதிக்கப்படுகிறது. துாய்மைப் பணியாளர்களுக்கு பணிச்சுமையும் அதிகரிக்கிறது.
எனவே, உடனடியாக இந்த வாகனத்தை சரிசெய்ய, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.