sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கலை துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருது

/

கலை துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருது

கலை துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருது

கலை துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருது


ADDED : மார் 17, 2024 02:23 AM

Google News

ADDED : மார் 17, 2024 02:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட கலைமன்றம் சார்பில், 2022 - -23, 2023- - 24ம் ஆண்டுகளுக்கான கலை துறையில் சாதனை படைத்த கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில், 30 விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்பின், 66 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்களுக்கான, 'கலைமுதுமணி' விருதை,பாலகிருஷ்ணன் - ஓவியம்,ஆறுமுகம் - தவில், சூரியா, கஸ்துாரி ஆகியோர் கிராமிய நாடகம், ஸ்ரீதரன் - மிருதங்கம், சந்திரன் - பம்பை, கைச்சிலம்பு.

மேலும், 51 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கலை நன்மணி விருதை வேதகிரி - நாடகம், ராஜிவி - கிராமிய நாடகம், சுப்பிரமணியன் - நாடகம், எழுத்தாளர் ராகவன் - நாதஸ்வரம், ஜெகநாதன் - பம்பை, கைச்சிலம்பு, சூரியநாராயணன் - மிருதங்கம்.

இதையடுத்து, 36 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 'கலைச்சுடர் மணி' விருதை, கோவிந்தசாமி - பம்பை, சிவகுமார் - பரதநாட்டியம், பாபு - சிலம்பாட்டம், சங்கர் - கஞ்சீரா, ஆசன் - தவில், டாக்டர் பத்ரிநாராயணன் - வயலின்.

தொடர்ந்து, 19 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டோக்கான 'கலைவளர்' விருதை, சிவராமன் - சிலம்பாட்டம், சண்முகம் - ஓவியம், நிர்மல் ஹரிஷ் - குரலிசை, ஜெயஸ்ரீ ரவிச்சந்திரன், ஹரிணிபாலாம்பிகா ஆகியோர் பரதநாட்டியம், அருண் விஸ்வேஷ்வரன் - நாதஸ்வரம்.

மேலும், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான, 'கலை இளமணி' விருதை, ஷரோன் - சிலம்பாட்டம், சாய் அருண், சயாலி அஸ்லி ஆகியோர் ஓவியம், ஸ்ரீநிதி - பரதநாட்டியம்.

ஜனனி நாராயணன் - குரலிசை, கைச்சிலம்பாட்டத்தில் விஷ்வஜித் ஆகியோருக்கு, கலெக்டர் கூட்ட அரங்கில், மாவட்ட அளவிலான விருதுகளை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று முன்தினம் வழங்கினார்.






      Dinamalar
      Follow us