/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருது
/
சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருது
ADDED : செப் 16, 2025 12:02 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு, ராதாகிருஷ்ணன் விருதை, அமைச்சர் அன்பரசன், நேற்று வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்ட அரசு பள்ளிகளில் 2025-26ம் கல்வியாண்டில் வண்டலுார், ஓட்டேரி அரசு மேல்நிலைபள்ளி ஆசிரியர் ஆறுமுகம், பல்லாவரம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பத்மநாபன்.
கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஆனந்தி, செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் விக்டர், பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை பிரீத்தி.
நுாக்கணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை சங்கீதா, குழிப்பாந்தண்டலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சின்னசாமி, திருத்தேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் முருகன்.
மண்ணிவாக்கம் நடேசன் வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஆனந்திமணி ஆகியோர் சிறப்பாக பணியாற்றியதற்கு, டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது. இவ்விருதை, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், நேற்று வழங்கினார்.
மேலும், செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில், 2024-25ம் கல்வியாண்டில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் - 2 தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற வைத்த தலைமையாசிரியர்கள் மற்றும் 10 வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வைத்த தலைமையாசிரியர்களுக்கு, பாராட்டு சான்றிதழ்களையும், அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.