/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலியல் குற்றம் தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு
/
பாலியல் குற்றம் தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு
ADDED : நவ 05, 2024 07:48 PM
சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த சூணாம்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில், செங்கல்பட்டு மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக, போதை பொருள் மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம், நேற்று நடந்தது.
இதில், கஞ்சா, ஹான்ஸ், மது மற்றும் கூல்லிப் போன்ற போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பெண் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் மற்றும் அதற்கான தண்டனைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
போதை மற்றும் பாலியல் குற்றங்கள் வாயிலாக பாதிக்கப்பட்டால், உடனடியாக பெற்றோர், ஆசிரியர்கள் அல்லது காவல் துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என, மாணவ - மாணவியருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், பள்ளி மாணவ - மாணவியர், ஆசிரியர்கள், மக்கள் பிரதிநிதிகள் என, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.