/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு முகாம்
/
உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு முகாம்
ADDED : ஜூன் 24, 2025 07:22 PM
மதுராந்தகம்:மதுராந்தகத்தில், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், வணிகர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும், உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம், நேற்று நடந்தது.
இதில், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட அதிகாரி ரமேஷ்பாபு, மதுராந்தகம் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி சுஷ்மிதா பங்கேற்றனர்.
இந்நிகழ்வில், மதுராந்தகம் பகுதி வணிகர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அதிகாரி ரமேஷ் பாபு கூறியதாவது:
உணவகங்களை சுகாதார முறையில் வைத்துக் கொள்ள வேண்டும். வணிகர்கள் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு உரிமத்தில் புதிய உரிமம் பதிவு செய்தல், பழைய உரிமத்தை புதுப்பித்தல் மற்றும் பேக்கரி, ஸ்வீட் ஸ்டால், துரித உணவகம், மளிகை கடை, சூப்பர் மார்க்கெட், தள்ளுவண்டி, சாலையோர கடைகள், பழக்கடை, காய்கறி கடைகள் என, தொழில் செய்யும் வணிகர்கள், உணவு பாதுகாப்பு துறை வாயிலாக அங்கீகாரம் பெற்று நடத்த வேண்டும்.
பொருட்கள் தரம் குறைவாக இருந்தால், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.