/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புகையில்லா பொங்கல் மாமல்லையில் விழிப்புணர்வு
/
புகையில்லா பொங்கல் மாமல்லையில் விழிப்புணர்வு
ADDED : ஜன 10, 2025 09:50 PM
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், புகையில்லா பொங்கல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது..
மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடந்த இந்நிகழ்வை முன்னிட்டு பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், துாய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் புகையில்லா பொங்கல் உறுதிமொழி ஏற்று, அர்ஜுனன் தபசு சிற்பம் வரை, விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
போகியில் டயர், பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றை எரிக்காமல் தவிர்த்து, சுற்றுச்சூழல் மாசடையாமல் பாதுகாக்க வலியுறுத்தினர். அர்ஜுனன் தபசு சிற்பத்தின் முன், இதுகுறித்து விழிப்புணர்வு கோலமிட்டு, சுற்றுலா பயணியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். செயல் அலுவலர் சந்திரகுமார், மன்ற தலைவர் வளர்மதி, சுகாதார ஆய்வாளர் ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.