/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தலைக்கவசம் அவசியம் மறைமலை நகரில் விழிப்புணர்வு
/
தலைக்கவசம் அவசியம் மறைமலை நகரில் விழிப்புணர்வு
ADDED : ஏப் 23, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:மறைமலைநகர் போக்குவரத்து போலீசார் மற்றும் தனியார் பொறியியல் கல்லுாரி மாணவ- - மாணவியர் இணைந்து, இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணி மறைமலைநகர் பாவேந்தர் சாலை, திருவள்ளுவர் சாலை, ஜி.எஸ்.டி., சாலை வழியாக அண்ணா சாலை சந்திப்பில் முடிவடைந்தது.
தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு, போக்குவரத்து போலீசார் இனிப்பு வழங்கி, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் பிரமுகர்கள், கல்லுாரி மாணவ- - மாணவியர் பங்கேற்றனர்.

