/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லபுரம் அரசு பள்ளியில் பாரம்பரிய உணவு விழிப்புணர்வு
/
மாமல்லபுரம் அரசு பள்ளியில் பாரம்பரிய உணவு விழிப்புணர்வு
மாமல்லபுரம் அரசு பள்ளியில் பாரம்பரிய உணவு விழிப்புணர்வு
மாமல்லபுரம் அரசு பள்ளியில் பாரம்பரிய உணவு விழிப்புணர்வு
ADDED : மார் 21, 2025 11:04 PM

மாமல்லபுரம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பாரம்பரிய உணவுத் திருவிழா நடந்தது.
மாமல்லபுரம் நம் பாரம்பரிய உணவு வகைகள் குறித்து, மாணவ - மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆண்டுதோறும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது.
அந்த வகையில், இந்தாண்டும் உணவு திருவிழா நடத்தப்பட்டது.
இதில், மாணவ - மாணவியர் சிறுதானியங்கள், நவதானியங்கள், கேழ்வரகு, கம்பு உள்ளிட்டவற்றில் பலகாரங்கள், இனிப்புகள், கூழ் உள்ளிட்டவை தயாரித்து காட்சிப்படுத்தினர்.
ஆசிரியர்கள், பாரம்பரிய உணவுகள் சத்துக்கள் மிக்கதாக விளக்கி, அவற்றால் நமக்கு ஏற்படும் நன்மைகள், தற்கால நொறுக்குத் தீனிகளால் ஏற்படும் உடல் நல கோளாறுகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பள்ளி தலைமையாசிரியை லதா, நகராட்சித் தலைவி வளர்மதி, உணவுகளை சுவைத்து பாராட்டினர்.