/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா
/
அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா
ADDED : ஜூலை 12, 2025 08:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கபெருமாள் கோவில்:சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையில் அனைத்து கட்சியினர் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 268வது பிறந்தநாள் விழா நடந்தது.
இதில் செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோவன் மறைமலை நகர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மற்றும் பலர் பங்கேற்று அழகுமுத்துக்கோன் படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து ஜி.எஸ்.டி., சாலையில் 'ஹெல்மெட்' அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டது. ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.