/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாபுராயன்பேட்டை ஏரி உபரி நீர் கால்வாய் சீரமைப்பு
/
பாபுராயன்பேட்டை ஏரி உபரி நீர் கால்வாய் சீரமைப்பு
ADDED : அக் 30, 2024 10:18 PM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில், பாபுராயன் பேட்டை ஊராட்சி உள்ளது. இப்பகுதியில் ஏரி மற்றும் கிணற்று பாசனத்தின் வாயிலாக, விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த ஊராட்சியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. ஏரி உபரி நீர் செல்லும் கால்வாயில், ஆக்கிரமிப்பு மற்றும் புதர்கள் மண்டி இருந்ததால், பருவ மழை காலங்களில் கலங்கல் உபரி நீர், விவசாய நிலங்களில் புகுந்து, பயிர்கள் சேதமடைந்து வந்தது.
இதைத் தவிர்க்கும் விதமாக, வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாபுராயன் பேட்டை ஏரியிலிருந்து கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேறும் கால்வாயில் இருந்த மரங்கள், புதர்களை, ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக, ஊராட்சி நிர்வாகத்தினர் அகற்றி வருகின்றனர். கால்வாயை சீரமைக்கும் பணியில் நடக்கிறது.
கால்வாய் வழியாக செல்லும் உபரி நீர், சிறுபேர் பாண்டி ஏரிக்கு சென்றடைகிறது. பின், அங்கிருந்து உபரி நீர் வெளியேறி, ஓங்கூர் ஆற்றில் சென்றடைந்து, கடப்பாக்கம் அருகே வங்கக் கடலில் கலக்கிறது.