/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெடுஞ்சாலை, மின்வாரிய அலுவலகம் செங்கல்பட்டிற்கு மாற்றுவது அவசியம் பாலுார் குறுவட்ட கிராமத்தினர் வலியுறுத்தல்

ADDED : ஆக 27, 2025 12:32 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு, பாலுார் பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகம், ஸ்ரீபெரும்புதுாரில் செயல்படும் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் ஆகியவற்றை, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டிலிருந்து, செங்கல்பட்டிற்கு மாற்ற வேண்டு மென, கோரிக்கை வலுத்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், பாலுார் குறுவட்டத்தில் பாலுார், மேல்மணப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கான மின்வாரிய அலுவலகம், பாலுாரில் இயங்கி வருகிறது.
ஆனால், இந்த அலுவலகத்தின் நிர்வாக கட்டுப்பாடு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. இதேபோல் ஸ்ரீபெரும்புதுாரில் இயங்கி வரும் செங்கல்பட்டிற்கான நெடுஞ்சாலைத் துறை அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த அலுவலகங்களை, காஞ்சிபுரத்தில் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டிற்கு மாற்ற வேண்டுமென, கடந்த ஐந்தாண்டுகளாக பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.ஆனால், இன்னும் மாற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால் வீட்டு மின் இணைப்பு, விவசாய நில மோட்டார் மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக, மேற்கண்ட கிராமத்தினர் காஞ்சிபுரம் செல்ல வேண்டி உள்ளது.
இதேபோல, சாலைகளை சீரமைக்க கோரி மனு அளிக்கவும், ஸ்ரீபெரும்புதுாருக்கு செல்ல வேண்டி உள்ளது.
இந்நிலையில், மின்வாரிய அலுவலகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலகங்களை, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மாற்ற வேண்டுமென, கலெக்டர் சினேகாவிடம், கிராமவாசிகள் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.
இம்மனு மீது நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, கலெக்டர் சினேகா உத்தர விட்டுள்ளார்.