/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஓ.எம்.ஆரில் அதிகரிக்கும் 'பேனர்' அலட்சிய அதிகாரிகளால் அச்சம்
/
ஓ.எம்.ஆரில் அதிகரிக்கும் 'பேனர்' அலட்சிய அதிகாரிகளால் அச்சம்
ஓ.எம்.ஆரில் அதிகரிக்கும் 'பேனர்' அலட்சிய அதிகாரிகளால் அச்சம்
ஓ.எம்.ஆரில் அதிகரிக்கும் 'பேனர்' அலட்சிய அதிகாரிகளால் அச்சம்
ADDED : பிப் 16, 2025 02:46 AM

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள ஓ.எம்.ஆர்., நெடுஞ்சாலையில் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், பலவகை குடியிருப்புகள், மருத்துவமனைகள், 'மால்'கள் உள்ளிட்டவை அதிக அளவில் உள்ளன.
இந்த சாலை வழியே, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் தற்போது திருப்போரூர், கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் மற்றும் கட்டடங்கள் மீது அரசியல், திருமணம், மனை, வீடு விற்பனை உள்ளிட்ட விளம்பர பதாகைகள், பேனர்கள் வைக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
இந்த விளம்பர பேனர்கள் வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்ப்பதால், அதிக விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளது. மேலும், காற்றில் சரிந்து விழும் நிலையும் உள்ளது.
இதுபோன்ற பேனர் வைப்பதற்கு உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன. ஆனால், அந்த உத்தரவை யாரும் மதிப்பதில்லை.
எனவே, பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், ஓ.எம்.ஆர்., நெடுஞ்சாலையோரம் உள்ள பேனர்களை அகற்ற, அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

