/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அணுகுசாலையில் அணிவகுத்து வைக்கப்படும் பேனர்களை ஒழிக்க முடியல ...: அரசியல் கட்சியினருக்கு கடிவாளம் போடாததால் அதிருப்தி
/
அணுகுசாலையில் அணிவகுத்து வைக்கப்படும் பேனர்களை ஒழிக்க முடியல ...: அரசியல் கட்சியினருக்கு கடிவாளம் போடாததால் அதிருப்தி
அணுகுசாலையில் அணிவகுத்து வைக்கப்படும் பேனர்களை ஒழிக்க முடியல ...: அரசியல் கட்சியினருக்கு கடிவாளம் போடாததால் அதிருப்தி
அணுகுசாலையில் அணிவகுத்து வைக்கப்படும் பேனர்களை ஒழிக்க முடியல ...: அரசியல் கட்சியினருக்கு கடிவாளம் போடாததால் அதிருப்தி
ADDED : ஆக 12, 2025 10:59 PM

கூடுவாஞ்சேரி: வண்டலுார் முதல்- செங்கல்பட்டு வரையிலான ஜி.எஸ்.டி., ெநடுஞ்சாலையின் அணுகுசாலையில் ஆங்காங்கே, அரசியல் கட்சியினர் தொடர்ந்து பேனர்கள் வைப்பது தொடர்கதையாக உள்ளது. பேனர் கலாசாரத்தை ஒழிக்க முடியாத நிலையில், அணுகு சாலையின் 'ஓனர்'களாகவே அரசியல் கட்சியினர் மாறி வருவதால், வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், வண்டலுார் முதல் செங்கல்பட்டு வரையிலான ஜி.எஸ்.டி., நெடுஞ் சாலையில் அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாள் தவிர, கட்சி சார்ந்த பொதுக்கூட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சாலையோரங்களிலும், அணுகுசாலையிலும் விளம்பர பேனர்கள் வைப்பது, கடந்த இரு ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, ஜி.எஸ்.டி., சாலையிலும், உட்புற ஊராட்சிப் பகுதி சாலையோரங்களிலும், தற்போது அதிக அளவில் பேனர்கள் வைக்கப்படுகின்றன.வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் கடும் இடையூறு ஏற்படுத்தும் இந்த பேனர்களால், அதிக விபத்துகளும் அர ங்கேறி வருகின்றன.
கடந்த பிப்., 24ல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி, அ.தி.மு.க.,வினர் சார்பில், ஜி.எஸ்.டி., சாலை உட்பட, செங்கல்பட்டு மாவட்டம் முழுதும், 200க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டன.
இதையடுத்து மார்ச் 1ல், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, தி.மு.க.,வினரும் போட்டிபோட்டு பேனர்களை வைத்தனர்.
இந்த வகையில், மாவட்டம் முழுதும் 500க்கும் மேற்பட்ட பேனர்கள், நடைபாதை மற்றும் வாகன வழித்தடங்களை மறித்து வைக்கப்பட்டன.இந்த பேனர்கள் பல மாதங்களைக் கடந்தும் அகற்றப்படாமல் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், சாலையோர கடைக்காரர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தன.
இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியான நிலையில், அந்த பேனர்கள் அகற்றப்பட்டன.
ஆனால், அடுத்தடுத்து வரும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக, மீண்டும் மீண்டும் பேனர்களை வைப்பது தொடர்கதையாக நீடிக்கிறது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகரித்து வரும் பேனர் கலாசாரம், அச்சத்தை தருகிறது.
வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள ஜி.எஸ்.டி., சாலையிலும், அரசியல் கட்சியினர் போட்டி போட்டு பேனர்களை வைக்கின்றனர். சாலை என்பது பொது போக்குவரத்திற்கானது. இங்கே, வாகன ஓட்டிகள், பாதசாரிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், பேனர்கள் வைக்கப்படுகின்றன.
கட்சி தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாள் மட்டுமின்றி, கட்சி சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அணுகு சாலையை மறித்து பேனர் வைக்கும் கலாசாரம், தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அரசியல் கட்சியினரைப் பார்த்து, பொதுமக்களும் கோவில் க்ஷதிருவிழா, பிறந்தநாள்காது குத்து, திருமணம் என, தங்கள் பங்கிற்கு பேனர்களை வைப்பது, தற்போது பிரபலமாகி வருகிறது.
இவ்வாறு வைக்கப்படும் பேனர்கள், சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி அல்லது விழா முடிந்தும் அகற்றப்படுவதில்லை.
காற்று, மழையால் அழியும் வரை, அந்த இடத்தில் மாதக் கணக்கில் இருந்து வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன.
இதுபோன்ற பேனர்கள் அனைத்தும், 120 சதுர அடிக்கும் குறையாத அளவில் வைக்கப்படுகின்றன.
சவுக்கு கம்புகளால் சட்டங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றின் மீது பேனர்கள் பொருத்தப்பட்டு, சாலையில் குழி பறித்து பேனர்கள் வைக்கப்படுகின்றன. காற்று பலமாக வீசும் போது, இந்த பேனர்கள் சாலையில் சரிந்து விழும். அப்போது, வாகன ஓட்டிகள் மீது விழுந்து பெரும் விபத்து, உயிர்பலிநிகழவும் வாய்ப்புள்ளது.
எனவே, சாலையோரம் வைக்கப்படும் பேனர் கலாசாரத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க போலீசாரும், அரசு அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிலையில், 'அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத பேனர்கள் மற்றும் பிளக்ஸ் போர்டுகளை அகற்ற வேண்டும். இந்த விஷயத்தில், கடமை தவறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை, குற்றவியல் நடவடிக்கையை உயரதிகாரிகள் எடுக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டுள்ளது.
� பாதசாரிகளுக்கான நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பேனர், 100 நாட்களைக் கடந்தும் அகற்றப்படாமல் உள்ளது. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சீனிவாசபுரம், கூடுவாஞ்சேரி.