/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொத்தேரி ஜி.எஸ்.டி., சாலை ஓரம் மாட்டிறைச்சி கழிவுகள் குவிப்பு
/
பொத்தேரி ஜி.எஸ்.டி., சாலை ஓரம் மாட்டிறைச்சி கழிவுகள் குவிப்பு
பொத்தேரி ஜி.எஸ்.டி., சாலை ஓரம் மாட்டிறைச்சி கழிவுகள் குவிப்பு
பொத்தேரி ஜி.எஸ்.டி., சாலை ஓரம் மாட்டிறைச்சி கழிவுகள் குவிப்பு
ADDED : ஜன 30, 2025 01:58 AM

மறைமலைநகர்:செங்கல்பட்டு புறநகர் பகுதிகளான மறைமலைநகர், பொத்தேரி, சிங்க பெருமாள் கோவில், காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரம் முழுதும் பல இடங்களில், சாலையில் இருபுறமும் இறைச்சி கழிவுகள் குவியல்களாக கொட்டப்பட்டு உள்ளன.
இதன் காரணமாக இந்த பகுதியில் தினமும் செல்லும் பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகள், கடும் அவதியடைந்து வருகின்றனர். இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., சாலையில் பொத்தேரி -- காட்டாங்கொளத்துார் இடையே தாம்பரம் மார்க்கத்தில் ரயில்வே தண்டவாளம் அருகில் உள்ள காலி இடத்தில், மொத்தமாக மாட்டு இறைச்சி எலும்புகள், கொம்பு உள்ளிட்டவை மொத்தமாக கொட்டப்பட்டு உள்ளன.
இதனால், இந்த பகுதி முழுதும் துர்நாற்றம் வீசி இந்த வழியாக செல்லும் தனியார் பள்ளி குழந்தைகள் வெகுவாக பாதிக்கப்படுகிறனர்.
மேலும், இந்த பகுதியை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இரவு நேரங்களில் மாடுகள் அடிக்கடி திருடுபோவதாக, விவசாயிகள் மற்றும் மாடுகள் வளர்ப்போர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது இங்கு மாட்டின் இறைச்சி, கயிறு உள்ளிட்டவை கொட்டப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கழிவுகள், இரவில் வாகன போக்குவரத்து குறைவாக உள்ள நேரத்தில் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. இவற்றை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

