/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'பெர்ட்ரம்' கோப்பை பூப்பந்தாட்டம் துவக்கம்
/
'பெர்ட்ரம்' கோப்பை பூப்பந்தாட்டம் துவக்கம்
ADDED : ஆக 19, 2025 12:18 AM
சென்னை, 'பெர்ட்ரம்' கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில், பால் பேட்மின்டன் எனும் பூப்பந்தாட்டம் துவங்கியுள்ளது.
லயோலா கல்லுாரியின் நிறுவனர், 'பெர்ட்ரம்' நினைவு கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், 91ம் ஆண்டாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நடந்து வருகின்றன.
நேற்று காலை துவங்கிய பால் பேட்மின்டன் போட்டியில், 16 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சேலம் ஏ.வி.எஸ்., அணி, 35 - 22, 35 - 11 என்ற செட் கணக்கில் சென்னை பேட்ரிசியன் கல்லுாரியை வீழ்த்தியது.
அதேபோல், ஆர்.எம்.கே., விவேகானந்தா, 29 - 35, 35 - 23, 35 - 32 என்ற செட் கணக்கில் நாசரேத் கல்லுாரியை தோற்கடித்தது. இன்று, பால் பேட்மின்டன் அரையிறுதி மற்றும் டேபிள் டென்னிஸ் முதல் சுற்று போட்டிகள் நடக்கின்றன.
கல்லுாரிகளுக்கு இடையிலான டென்னிஸ் போட்டியில், லயோலா ஒயிட்ஸ் மற்றும் ஐ.ஐ.டி., மெட்ராஸ் அணிகள், அரையிறுதியில் எதிர்கொண்டன.
விறுவிறுப்பான தனிநபர் ஆட்டத்தில், லயோலாவின் ஹேமச்சந்திரன், 6 - 4, 6 - 3 என்ற செட் கணக்கில் ஐ.ஐ.டி., வீரர் கருவை தோற்கடித்தார். இரட்டையர் போட்டியில், லயோலாவின் ஹரி மற்றும் ராகுல் ஜோடி, 6 - 3, 7 - 5 என்ற செட் கணக்கில் ஐ.ஐ.டி., வீரர்கள் கரு மற்றும் துருவ் ஜோடியை வீழ்த்தி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.