/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புலியூரில் அங்கன்வாடிக்கு பூமிபூஜை
/
புலியூரில் அங்கன்வாடிக்கு பூமிபூஜை
ADDED : பிப் 18, 2025 04:36 AM
திருக்கழுக்குன்றம் : புலியூரில், அங்கன்வாடி கட்டுமானப் பணிகள், பூமிபூஜையுடன் துவக்கப்பட்டன. திருக்கழுக்குன்றம் அடுத்த, பட்டிக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட புலியூர் பகுதியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில், அங்கன்வாடி இயங்குகிறது.
அதன் கட்டடம் பாழடைந்து பழுதான நிலையில், புதிய கட்டடம் கட்டுமாரு பெற்றோர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, சென்னை அணுமின் நிலைய நிர்வாகத்திடம், சமூக பொறுப்பு திட்டத்தில் கட்ட, மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்தது.
இதுதொடர்பாக, அணுமின் நிலைய நிர்வாகம் பரிசீலித்து, 30 லட்சம் ரூபாய் ஒதுக்கியது.
நிலைய அணுசக்தி பயிற்சி மைய கண்காணிப்பாளர் வெங்கட சுப்பிரமணியன், பூமிபூஜையுடன் கட்டுமானப் பணிகளை துவக்கி வைத்தார். நிலைய பிரதிநிதிகள், வட்டார வளர்ச்சி நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.

