/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அங்கன்வாடி கட்டடத்திற்கு பூமி பூஜை
/
அங்கன்வாடி கட்டடத்திற்கு பூமி பூஜை
ADDED : ஜன 20, 2025 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுப்பட்டினம், கல்பாக்கம் அடுத்த நல்லாத்துார் ஊராட்சி, கொந்தகாரிகுப்பத்தில், அங்கன்வாடி மையம் இயங்குகிறது.
பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, அங்கு புதிய கட்டடம் கட்ட, அப்பகுதியினர் தொடர்ந்து வலியுறுத்தினர். இதை மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து, சென்னை அணுமின் நிலைய, பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தில் கட்டடம் கட்ட பரிந்துரைத்தது.
இத்திட்டத்திற்கு அணுமின் நிலைய நிர்வாகம், 30 லட்சம் ரூபாய் ஒதுக்கியது. நிலைய முதன்மை கண்காணிப்பாளர் செல்வகுமரன், ஊராட்சித் தலைவி பிரமிளா உள்ளிட்டோர், பூமி பூஜையுடன் கட்டுமானப் பணிகளை துவக்கினர்.

