ADDED : ஜூன் 30, 2025 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சியில், 10க்கும் மேற்பட்ட பழங்குடி மற்றும் இருளர் இன மக்கள், குளக்கரை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் வசித்து வந்தனர்.
இவர்களுக்கு பட்டா மற்றும் வீட்டுமனை வேண்டி விண்ணப்பித்து இருந்தனர்.
இதையடுத்து, வருவாய் துறை சார்பில் முதற்கட்டமாக 10 நபர்களுக்கு வீட்டுமனை பிரித்து வழங்கப்பட்டு, பாரத பிரதமரின் ஜனம் திட்டத்தின் கீழ், ஒரு வீட்டிற்கு தலா 5.04 லட்சம் ரூபாய் என 10 வீடுகளை 50.4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடுகள் கட்ட, நேற்று காலை பூமி பூஜை நடைபெற்றது.
இதில், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி பங்கேற்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.