/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட பூமி பூஜை
/
அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட பூமி பூஜை
ADDED : டிச 19, 2024 08:55 PM
அச்சிறுபாக்கம்:செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகள் என, 144 பள்ளிகள் உள்ளன.
இவற்றில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், சுற்றுச்சுவர், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குனருக்கு, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கருத்துரு அனுப்பி வைத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, மாவட்டத்தில் நபார்டு வங்கி நிதி உதவியுடன், 17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில், அச்சிறுபாக்கம் மார்வர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட, 1.88 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நேற்று, அச்சிறுபாக்கம் மார்வர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் தலைமையில், கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட பூமி பூஜை நடந்தது. பொதுப்பணித்துறை பொறியாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.