/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொம்மராஜபுரம் பள்ளியில் வகுப்பறை கட்ட பூமி பூஜை
/
பொம்மராஜபுரம் பள்ளியில் வகுப்பறை கட்ட பூமி பூஜை
ADDED : நவ 26, 2024 02:26 AM
புதுப்பட்டினம், கல்பாக்கம் அடுத்த நல்லாத்துார் ஊராட்சியில் உள்ள பொம்மராஜபுரம் பகுதியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி இயங்குகிறது. ஊராட்சி பகுதிக்குட்பட்டோரின் குழந்தைகள் இங்கு பயில்கின்றனர்.
அங்கு, மாணவ - மாணவியருக்கு போதிய வகுப்பறை கட்டடம் இல்லாமல் இட நெருக்கடியில் சிரமப்பட்டனர். கல்பாக்கத்தில் இயங்கும் சென்னை அணுமின் நிலைய நிர்வாகத்திடம், கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட வலியுறுத்தினர்.
இதை பரிசீலித்த அணுமின் நிலைய நிர்வாகத்திற்கு, மாவட்ட நிர்வாகமும் அனுமதித்தது.
இதையடுத்து, 1.16 கோடி ரூபாய் மதிப்பில், தரைத்தளம், மேல்தளம் என, தலா இரண்டு வகுப்பறைகளுடன், வகுப்பறை கட்டடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது.
நிலைய இயக்குனர் சேஷையா, நேற்று பூமி பூஜையுடன் கட்டுமானப் பணிகளை துவக்கி வைத்தார். நிலைய சமூக பொறுப்புக் குழு உறுப்பினர் செயலர் ஜெகன் மற்றும் நிர்வாகிகள், தலைமையாசிரியை ஜெயஸ்ரீ, ஊராட்சித் தலைவர் பிரமிளா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.