/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் ஒன்றியத்தில் பணிகளுக்கு பூமி பூஜை
/
திருப்போரூர் ஒன்றியத்தில் பணிகளுக்கு பூமி பூஜை
ADDED : பிப் 09, 2024 10:12 PM
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய தண்டலம் ஊராட்சியில், 15வது நிதி குழு மானியம் மற்றும் ஜே.ஜே.எம்., குடிநீர் திட்டத்தின் கீழ், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க, பூமி பூஜை விழா நேற்று நடந்தது.
இந்த நீர்த்தேக்க தொட்டிகள், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படுகின்றன. ஊராட்சி தலைவர் ஆனந்தன், பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார்.
கேளம்பாக்கம் ஊராட்சியில், பெரிய ஹர்பன் எல்.பி.ஏ., திட்டத்தின் கீழ், 2.5 கோடி ரூபாய் மதிப்பில், 10 புதிய சாலைகளும், படூர் ஊராட்சியில் புதிய 22 சாலைகளும் அமைக்க பூமி பூஜை நடந்தது.
அதோடு, திருப்போரூர் தொகுதி சட்டசபை உறுப்பினர் மேம்பாடு நிதியில், 9 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை திறப்பு விழாவும் நடந்தது.