/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விராலுார் ஊராட்சிக்கு விடிவு பாலம் அமைக்க பூமி பூஜை
/
விராலுார் ஊராட்சிக்கு விடிவு பாலம் அமைக்க பூமி பூஜை
விராலுார் ஊராட்சிக்கு விடிவு பாலம் அமைக்க பூமி பூஜை
விராலுார் ஊராட்சிக்கு விடிவு பாலம் அமைக்க பூமி பூஜை
ADDED : பிப் 17, 2024 01:30 AM

செய்யூர்:செய்யூர் அருகே விராலுார் ஊராட்சிக்கு உட்பட்ட வெற்றிக்காடு கிராமத்தில், ஜமீன்எண்டத்துார் - செய்யூர் சாலை உள்ளது. இச்சாலை வழியே தினமும் 100க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.
சாலையின் இடையே பெரிய ஓடை உள்ளது. ஒவ்வொரு மழைக்காலத்திலும் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாலை துண்டிக்கப்படும்.
இதனால், போக்கு வரத்து முற்றிலும் பாதிக்கப்படும். பல ஆண்டுகளாக பாலம் அமைக்க அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், பொதுப்பணித்துறை சார்பில், 1.34 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 100 மீட்டர் நிளத்திற்கு புதிய பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கிராமவாசிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.