/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கொண்டங்கி சாலையில் உயர்மட்ட பாலம் ரூ.3.85 கோடியில் அமைக்க பூமி பூஜை
/
கொண்டங்கி சாலையில் உயர்மட்ட பாலம் ரூ.3.85 கோடியில் அமைக்க பூமி பூஜை
கொண்டங்கி சாலையில் உயர்மட்ட பாலம் ரூ.3.85 கோடியில் அமைக்க பூமி பூஜை
கொண்டங்கி சாலையில் உயர்மட்ட பாலம் ரூ.3.85 கோடியில் அமைக்க பூமி பூஜை
ADDED : பிப் 13, 2024 03:57 AM

திருப்போரூர், திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய அகரம் கிராமத்தில் இருந்து, கொண்டங்கி சாலை வழியாக, மறைமலை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, சுற்று வட்டாரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட ஒன்றிய கட்டுபாட்டில் உள்ள இந்த சாலை, தொடர்ச்சியான பராமரிப்பு இல்லாததால், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மண் சாலையாக மாறியது.
மழைக்காலத்தில், இச்சாலை அருகே உள்ள கொண்டங்கி ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர், அகரம் - கொண்டங்கி சாலையின் குறுக்கே அமைந்துள்ள குறுகிய தரைப்பாலத்தின் வழியாக செல்லும்.
வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும்போது, சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலையை கடந்து வெள்ள நீர் செல்லும். இதனால், அப்போது சாலையின் போக்குவரத்து துண்டிக்கப்படும்.
இதனால், 1 கி.மீ., கடக்க வேண்டிய சாலையை, 10 கி.மீ., துாரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே, நிரந்தர தீர்வாக, அகரம்- - கொண்டங்கி சாலையில், புதிய சாலையுடன் உயர்மட்ட தரைப்பாலம் அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, நபார்டு வங்கி நிதி உதவியுடன் உயர்மட்ட பாலம் மற்றும் பாலத்திற்கான அணுகு சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, கடந்த ஜூலை மாதம், ஊரக வளர்ச்சித்துறையினர், பொதுப்பணித்துறையினர் கள ஆய்வு மேற்கொண்டனர். இதில், மண் பரிசோதனை, வாகனங்களின் எடை, அவற்றால் ஏற்படும் அசைவுகள் கணக்கிடப்பட்டன.
கள ஆய்வு முடிந்த நிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், நபார்டு திட்டத்தில், 2.11 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம்; 1.74 கோடி ரூபாய் மதிப்பில் 1.5 கி.மீ.,க்கு புதிய அணுகு சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில் திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் பங்கேற்று, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
அதேபோல், நெல்லிக்குப்பத்தில் ஒன்றிய பொது நிதியில், 6.50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட விழா மேடையையும் திறந்து வைத்தார். விழாவில், ஊராட்சி, ஒன்றிய, மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.