/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை ஸ்தலசயனர் கோவிலில் வரும் 31ல் பூதத்தாழ்வார் உற்சவம்
/
மாமல்லை ஸ்தலசயனர் கோவிலில் வரும் 31ல் பூதத்தாழ்வார் உற்சவம்
மாமல்லை ஸ்தலசயனர் கோவிலில் வரும் 31ல் பூதத்தாழ்வார் உற்சவம்
மாமல்லை ஸ்தலசயனர் கோவிலில் வரும் 31ல் பூதத்தாழ்வார் உற்சவம்
ADDED : அக் 22, 2024 07:43 AM
மாமல்லபுரம், : மாமல்லபுரத்தில் பிரசித்திபெற்ற ஸ்தலசயன பெருமாள் கோவில் அருகில் உள்ள நந்தவன தோட்டத்தில், மலர்ந்த குருக்கத்தி மலரில், ஐப்பசி மாதம் அவிட்டம் நட்சத்திர நாளில், பூதத்தாழ்வார் அவதரித்தார்.
அன்பே தகழியாய் என, ஸ்தலசயன பெருமாளை போற்றிப் பாடியுள்ள அவர், இக்கோவிலில் தனி சன்னிதியில் வீற்று அருள்பாலிக்கிறார்.
அவருக்கு ஆண்டுதோறும் அவதார உற்சவம், 10 நாட்கள் நடத்தப்படும். கோவில் திருப்பணிகள் காரணமாக, இரண்டு ஆண்டுகளாக உற்சவம் நடத்தப்படவில்லை.
அதன்பின், மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, தற்போது வரும் 31ம் தேதி, பூதத்தாழ்வார் அவதார உற்சவம் துவங்குகிறது. நவ., 9ம் தேதி வரை நடைபெறும் உற்சவத்தில், தினசரி கோவிலில் பிற்பகல் 2:00 மணிக்கு திருமஞ்சனம் நடக்கிறது.
நாலாயிர திவ்ய பிரபந்த சேவை, திருப்பாவை சாற்றுமறையைத் தொடர்ந்து, பூதத்தாழ்வார் மாலை வீதியுலா செல்கிறார். கோவிலை அடைந்ததும், திருவாய்மொழி சேவை நடக்கிறது.
உற்சவத்தில், மூன்று, ஆறு, ஒன்பது, 10 ஆகிய நாட்களில், ஸ்தலசயன பெருமாள், தேவியர் ஆகியோருடனும், பிற நாட்களில் தனித்தும் வீதியுலா செல்கிறார். 9ம் நாள் முக்கிய உற்சவமாக, 8ம் தேதி திருத்தேரில் உலா செல்கிறார்.
அவதார ஜெயந்தி நாளான 9ம் தேதி, ஆழ்வாருக்கு கோவிலில் சுவாமியர் மங்களாசாசனம் செய்து, அவதார ஸ்தல மண்டபத்தில் திருமஞ்சனம், திருப்பாவை சாற்றுமறை நடக்கிறது. அதன்பின், கோவிலை அடைந்து, திருவாய்மொழி சேவை நடக்கிறது.