/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாவா தயாரித்த பீஹார் நபர் கைது
/
மாவா தயாரித்த பீஹார் நபர் கைது
ADDED : ஏப் 05, 2025 10:15 PM
மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த விஷ்ணு பிரியா நகரை சேர்ந்த நபர் ஒருவர் வீட்டில் மாவா என்னும் போதை புகையிலை பொருட்கள் தயாரித்து கிண்டி பகுதியில் விற்பனை செய்து வருவதாக மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று காலை அந்த நபரை பின்தொடர்ந்து சென்ற போலீசார் கிண்டியில் வைத்து அவரை பிடித்து அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து, அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் நடத்திய விசாரணையில் பீஹார் மாநிலத்தை சேர்ந்த பிரோஜ், 41. என்பதும் விஷ்ணு பிரியா நகரில் வாடகைக்கு தங்கி புகையிலை பொருட்களை கிரைண்டரில் அரைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

