/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்சாரம் பாய்ந்து பீஹார் வாலிபர் பலி
/
மின்சாரம் பாய்ந்து பீஹார் வாலிபர் பலி
ADDED : நவ 24, 2025 02:56 AM
செங்கல்பட்டு: பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுமோத்ஸ்வரன், 28. இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக, செங்கல்பட்டு ராட்டினங்கிணறு பகுதியில் உள்ள இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று அதிகாலை 4:30 மணியளவில், வழக்கம் போல வேலைக்கு வந்த சுமோத்ஸ்வரன், கோழி இறைச்சி சுத்தம் செய்யும் இயந்திரத்தை இயக்கியுள்ளார்.
அப்போது மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு நகர போலீசார், சுமோத்ஸ்வரன் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில், மின் ஒயரை எலி கடித்ததன் காரணமாக, அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து சுமோத்ஸ்வரன் உயிரிழந்தது தெரிந்தது.

