/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விரைவு ரயில் மோதி பீகார் இளைஞர் பலி
/
விரைவு ரயில் மோதி பீகார் இளைஞர் பலி
ADDED : நவ 13, 2024 08:10 PM
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் - மறைமலை நகர் ரயில் நிலையங்களுக்கு இடையே, சிங்கபெருமாள் கோவில் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருகின்றன.
அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தில், நேற்று அதிகாலை ரயிலில் அடிபட்டு, இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக, தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார், உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில், இறந்த நபர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஜஸ்தகீர் ஆலன், 27, என்பதும், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்த இவர், தண்டவாளத்தை கடக்கும் போது சேலம் விரைவு ரயில் மோதி உயிரிழந்ததும் தெரிய வந்தது.