/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குப்பை கொட்ட தனி இடம் ஒதுக்க கரும்பாக்கத்தினர் கோரிக்கை
/
குப்பை கொட்ட தனி இடம் ஒதுக்க கரும்பாக்கத்தினர் கோரிக்கை
குப்பை கொட்ட தனி இடம் ஒதுக்க கரும்பாக்கத்தினர் கோரிக்கை
குப்பை கொட்ட தனி இடம் ஒதுக்க கரும்பாக்கத்தினர் கோரிக்கை
ADDED : மார் 20, 2025 01:26 AM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கரும்பாக்கம் ஊராட்சியில் கரும்பாக்கம், விரால்பாக்கம், ராயல்பட்டு, பூயிலுப்பை, பாலுார் ஆகிய கிராமங்கள் உள்ளன.
இதில் கரும்பாக்கம் கிராமம் பிரதான சாலையில் அமைந்துள்ளதால், அதிகமான அளவில் குடியிருப்புகள், ஆயில் மில், மாவு மில், மளிகை கடைகள் உள்ளன.
அதனால் தெருக்களில் துாய்மை பணியாளர்கள் வாயிலாக சேகரிக்கப்படும் குப்பையை தரம் பிரித்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், குப்பையை குவித்து வைக்கவும், அதிலிருந்து உரம் தயாரிக்கவும், ஊராட்சியில் போதிய குப்பைக் கிடங்கு இல்லை.
ஆங்காங்கே கிராமங்களில் சேகரிக்கப்படும் குப்பை, சாலை ஓரம் குவிக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படுகிறது.
குப்பையை தீயிட்டு எரிப்பதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், பகுதிவாசிகள் அவதிப்படுகின்றனர். எனவே, ஊராட்சியில் உள்ள அரசுக்குச் சொந்தமான காலியிடத்தை, குப்பை கொட்ட ஒதுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.