/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பள்ளியை மூடுவதாக அறிவிப்பு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை
/
பள்ளியை மூடுவதாக அறிவிப்பு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை
பள்ளியை மூடுவதாக அறிவிப்பு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை
பள்ளியை மூடுவதாக அறிவிப்பு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை
ADDED : ஏப் 09, 2025 10:20 PM
பெருங்களத்துார்:தாம்பரத்தை அடுத்த பெருங்களத்துாரில், 'பிரின்ஸ் நர்சரி மற்றும் பிரைமரி' என்ற பெயரில், தனியார் பள்ளி இயங்கி வருகிறது. எல்.கே.ஜி., முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள அப்பள்ளியில், 120 மாணவர்கள் படிக்கின்றனர்..
இந்நிலையில், பெற்றோர் மொபைல் போனுக்கு, இன்னும் சில மாதங்களில் பள்ளி மூடப்படும் என, குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதை படித்த பெற்றோர், பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டனர். அதற்கு, பள்ளி தாளாளருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், பள்ளி மூடப்படும் என, தெரிவித்துள்ளனர்.
அதனால், நேற்று காலை, 20க்கும் மேற்பட்ட பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு, பள்ளியை மூடக்கூடாது என, தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இது குறித்து விசாரித்ததில், தாளாளருக்கு உடல்நிலை சரியில்லாததால், பள்ளியை நடத்த முடியவில்லை என்றும், இத்தகவல் அனைத்து பெற்றோர் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதும் தெரிந்தது.
வரும் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையின் போது, அனைவரையும் வேறு பள்ளிகளில் சேர்க்குமாறு, ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பாக விளக்கம் கேட்க பள்ளி நிர்வாகத்தினரை தொடர்பு கொண்ட போது, அவர்கள் அழைப்பை எடுக்கவில்லை.

