/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கழிவு நீர் கால்வாயில் ஆக்கிரமிப்பு அளவீடு செய்யக்கோரி முற்றுகை
/
கழிவு நீர் கால்வாயில் ஆக்கிரமிப்பு அளவீடு செய்யக்கோரி முற்றுகை
கழிவு நீர் கால்வாயில் ஆக்கிரமிப்பு அளவீடு செய்யக்கோரி முற்றுகை
கழிவு நீர் கால்வாயில் ஆக்கிரமிப்பு அளவீடு செய்யக்கோரி முற்றுகை
ADDED : செப் 19, 2024 12:48 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சியில், 24 வார்டுகள் உள்ளன. அதில், 20வது வார்டுக்கு உட்பட்ட பார்த்தசாரதி தெரு, திருவள்ளுவர் தெருவில், 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
அங்கு, நகராட்சி சார்பாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியில், கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, முறையாக அளவீடு செய்யாமல், நகராட்சி நிர்வாகத்தினர் பணி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
அதனால், 20வது வார்டு பொதுமக்கள் மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பினர், நேற்று மதுராந்தகம் வட்டாட்சியரிடம், அளவீடு செய்து பணி மேற்கொள்ளக்கோரி மனு அளித்தனர்.
பின், மதுராந்தகம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, நகராட்சி அதிகாரிகள் தரப்பில், முறையான அளவீடு செய்து, பின் பணி மேற்கொள்ளப்படும் எனவும், அதுவரை கால்வாய் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும் எனவும், தெரிவித்தார்.
பின், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.