/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போட்- ஹவுஸ் கூரை சேதம்: சீரமைக்காததால் அதிருப்தி
/
போட்- ஹவுஸ் கூரை சேதம்: சீரமைக்காததால் அதிருப்தி
ADDED : ஜன 22, 2025 12:11 AM

செய்யூர்,
செய்யூர் அருகே முதலியார்குப்பம் கிராமத்தில் உள்ள கழிவெளிப் பகுதியில்,'ரெயின் ட்ராப் போட் ஹவுஸ்' உள்ளது. இது, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படுகிறது.
விடுமுறை நாட்களில் சென்னை, புதுச்சேரி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து, தங்களின் விருப்பத்திற்கேற்ப படகுகளில் சவாரி செய்வர்.
பின், கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஓய்வெடுக்கும் கூடாரங்களில் அமர்ந்து பொழுது போக்குவது வழக்கம்.
இந்த 'போட் -ஹவுஸில்' கருத்தரங்கம் நடத்தும் வசதியும் உள்ளது. அலுவலக ஆலோசனைக் கூட்டங்கள், பிறந்தநாள், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகளும் இங்கு நடத்தப்பட்டு வந்தன.
சமீபத்தில் தாக்கிய 'பெஞ்சல்' புயலால், இந்த மீட்டிங் ஹால் கூரை முழுதும் சேதமடைந்தது. ஆனால், தற்போது வரை சீரமைக்கப்படாமல் உள்ளதால், இந்த அரங்கை பயன்படுத்த முடியவில்லை. பறவைகள் மற்றும் குரங்குகள் நாசம் செய்து வருகின்றன.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் கவனித்து, சேதமடைந்துள்ள கூரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.