/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடப்பாக்கம் கடற்கரையில் ஒதுங்கிய மூதாட்டி உடல்
/
கடப்பாக்கம் கடற்கரையில் ஒதுங்கிய மூதாட்டி உடல்
ADDED : ஏப் 28, 2025 01:02 AM
சூணாம்பேடு:கடப்பாக்கம் பகுதி கடற்கரையில் நேற்று மதியம், 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் உடல் கரை ஒதுங்கியது.
சூணாம்பேடு அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் கடற்கரையில், நேற்று மதியம் 12:00 மணிக்கு, 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி உடல் கரை ஒதுங்கியது.
இதைக்கண்ட அப்பகுதி மீனவர்கள், சூணாம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சூணாம்பேடு போலீசார் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், ஆலம்பரைக்குப்பம் கோட்டைப் பகுதியில் மூதாட்டியின் காலணி மற்றும் 'மணிபர்ஸ்' கிடைத்துள்ளது.
குளிக்க சென்ற போது தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.

