/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
படாளம் ஆலையில் கொதிகலனை இளஞ்சூடேற்றுதல் நிகழ்வு
/
படாளம் ஆலையில் கொதிகலனை இளஞ்சூடேற்றுதல் நிகழ்வு
ADDED : டிச 05, 2025 05:38 AM
மதுராந்தகம்: மதுராந்தகம் சர்க்கரை ஆலையில் அரவை துவங்குவதை முன்னிட்டு, ஆலையின் கொதிகலன்களை இளஞ்சூடேற்றுதல் நிகழ்வு, நேற்று நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்துள்ள படாளத்தில், கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது.
இதில், இந்த ஆண்டுக்கான அரவை பணிகள், டிசம்பர் இரண்டாவது வாரத்தில் துவங்க உள்ளன.
இதையொட்டி, ஆலையின் செயலாட்சியர் குமரேஸ்வரி தலைமையில், கொதிகலன்களை இளஞ்சூடேற்றுதல் நிகழ்வு, பூஜைகளுடன் நேற்று துவங்கியது.
இந்தாண்டு, 85,000 டன் கரும்பு அரவை செய்ய எதிர்பார்க்கப்படுவதாக, கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில், ஆலையின் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள், கரும்பு விவசாயிகள், வாகன ஓட்டுநர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றனர்.

