/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அத்திமனம் குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டுகோள்
/
அத்திமனம் குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டுகோள்
ADDED : டிச 05, 2025 05:39 AM
செங்கல்பட்டு: அத்திமனம் கிராமத்தில் உள்ள குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், அத்திமனம் கிராமத்தில் குளம் உள்ளது. இங்கு குளத்து தண்ணீரை கோவில் திருவிழா மற்றும் கால்நடைகளுக்கு குடிநீராக பயன்படுத்தி வந்தனர்.
கடந்த 10 ஆண்டுகளாக குளத்தை முறையாக துார்வாரி சீரமைக்காததால், குளத்தில் உள்ள தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால், இவ்வழியாக செல்லும் கிராம மக்கள், கடும் அவதிப்படுகின்றனர்.
பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் சூழலும் உள்ளது. குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் மாசடைந்துள்ளதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் முறையிட்டும், நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மழைக்காலங்களில் குளம் முழு கொள்ளளவு நிரம்பி வழியும் போது, தெருக்களில் மாசடைந்த தண்ணீர் வெளியேறுவதால், கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, குளத்தை துார்வாரி முறையாக சீரமைக்க வேண்டுமென, கலெக்டர் சினேகாவிடம், மனு அளித்தனர். இந்த மனுவின் மீது விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க, வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், இப்பணியை விரைந்து முடிக்க வேண்டுமென, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

