/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குளோரின் கலந்த சுகாதார குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தல்
/
குளோரின் கலந்த சுகாதார குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தல்
குளோரின் கலந்த சுகாதார குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தல்
குளோரின் கலந்த சுகாதார குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தல்
ADDED : டிச 05, 2025 05:39 AM
செங்கல்பட்டு: ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யும் போது, குளோரின் கலந்து வினியோகம் செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.
இதில், பெரும்பாலான கிராமங்களில், ஏரிகளில் கிணறு அமைத்து, குழாய் மூலமாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்பட்டு, மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை ஒவ்வொரு மாதமும், 5ம் தேதி மற்றும் 20ம் தேதிகளில் சுத்தம் செய்ய வேண்டும் என, ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் உத்தர விட்டுள்ளார்.
இதை, பல ஊராட்சிகள் பின்பற்றவில்லை என, குற்றச்சாட்டு உள்ளது. தெரு குழாய்களில் குடிநீர் வினியோகம் செய்யும் முன், குளோரின் பவுடர் கலந்து, தினமும் சுகா தாரமான குடிநீர் வழங்க வேண்டும்.
தற்போது, வடகிழக்கு பருவமழையை ஒட்டி, கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
ஏரிகளில் உள்ள திறந்தவெளி குடிநீர் கிணறுகள் மூடி இல்லாமல் உள்ளதால், குடிநீருடன் மழைநீர் கலந்து உள்ளது.
இந்த குடிநீரை பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் போது, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, கிராம மக்கள் நலன் கருதி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து, குளோரின் பவுடர் கலந்து குடிநீர் வினியோகம் செய்ய, கலெக்டர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

