/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாற்றுத்திறனாளிகள் தினம் முட்டுக்காடில் கொண்டாட்டம்
/
மாற்றுத்திறனாளிகள் தினம் முட்டுக்காடில் கொண்டாட்டம்
மாற்றுத்திறனாளிகள் தினம் முட்டுக்காடில் கொண்டாட்டம்
மாற்றுத்திறனாளிகள் தினம் முட்டுக்காடில் கொண்டாட்டம்
ADDED : டிச 05, 2025 05:40 AM
திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த முட்டுக்காடு பகுதியில், மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்நிறுவனத்தில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, சமூக முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்காக, 'மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய சமூகங்களை வளர்ப்பது' என்ற தலைப்பில், எட்டு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இதில், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு பேரணி போன்ற பல வகை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன
நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேச்சு போட்டி, விழிப்புணர்வு போஸ்டர் தயாரித்தல் போட்டிகளில், மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கேற்றனர்.
மேலும், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாற்றுத்திறனாளிகள் பற்றிய விழிப்புணர்வு திரைப்படமும் திரையிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், நிறுவன இயக்குநர் நசிகேதா ரவுட், இந்திய விமான நிலைய ஆணைய சென்னை இயக்குநர் ராஜ் கிஷோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

