/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பைக் - லாரி மோதல் வாலிபர் படுகாயம்
/
பைக் - லாரி மோதல் வாலிபர் படுகாயம்
ADDED : அக் 01, 2024 06:33 PM
திருப்போரூர்:பவுஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் அனீஸ் குமார், 28. இவர், நேற்று காலை 8:30 மணிக்கு, ஸ்பிளண்டர் பைக்கில், திருப்போரூர் அருகே ஆறுவழிச் சாலையில், வெங்கலேரியிலிருந்து கேளம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அதே மார்க்கத்தில் சென்ற லாரி ஒன்று, தண்டலம் சந்திப்பில் திரும்பிய போது, எதிர்பாராமல் அனீஸ்குமார் சென்ற பைக் மீது மோதியது. இந்த விபத்தில், அனீஸ்குமாரின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, படுகாயம் ஏற்பட்டது.
அங்கிருந்தவர்கள், 108 ஆம்புலன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுதொடர்பாக வழக்குபதிவு செய்த திருப்போரூர் போலீசார், தேனி மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் மணிகண்டனை பிடித்து, விசாரித்து வருகின்றனர்.