/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேறு நபருடன் தொடர்பில் இருந்த அனகாபுத்துார் பெண் கொலை திருமணத்திற்கு மறுத்ததால் காதலன் ஆத்திரம்
/
வேறு நபருடன் தொடர்பில் இருந்த அனகாபுத்துார் பெண் கொலை திருமணத்திற்கு மறுத்ததால் காதலன் ஆத்திரம்
வேறு நபருடன் தொடர்பில் இருந்த அனகாபுத்துார் பெண் கொலை திருமணத்திற்கு மறுத்ததால் காதலன் ஆத்திரம்
வேறு நபருடன் தொடர்பில் இருந்த அனகாபுத்துார் பெண் கொலை திருமணத்திற்கு மறுத்ததால் காதலன் ஆத்திரம்
ADDED : ஏப் 03, 2025 02:22 AM

பம்மல்:வேறொரு நபருடன் உறவில் இருந்த காதலியை, கடப்பா கல்லால் அடித்துக் கொன்ற நபர் போலீசில் சரணடைந்தார்.
சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு, நேற்று அதிகாலை வந்த நபர், தன்னுடன் தொடர்பில் இருந்த பெண்ணை கல்லால் அடித்துக் கொலை செய்துவிட்டதாக கூறி சரணடைந்தார்.
போலீசாரின் விசாரணையில், கொல்லப்பட்டது அனகாபுத்துார், அருள் நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்த பாக்யலட்சுமி, 33, என்பது தெரிந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணைக்கு பின் போலீசார் கூறியதாவது:
பம்மல் அடுத்த அனகாபுத்துார், கவுரி அவென்யூ இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ஞானசித்தன், 40; தண்ணீர் லாரி ஓட்டுநர். இவருக்கு திருமணமாகவில்லை.
கொல்லப்பட்ட பாக்யலட்சுமி, 33, கணவரை விவாகரத்து செய்து, மகள், மகனுடன் வசித்து வந்தார். வீட்டிலேயே 'லெதர் பர்ஸ், பெல்ட்' தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். அப்போது, பர்ஸ் வாங்க ஞானசித்தன் சென்றபோது, இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் காதலாக மாறி, இருவரும் அடிக்கடி வீட்டிலேயே சந்தித்து, உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில், பாக்யலட்சுமியை திருமணம் செய்து கொள்ள ஞானசித்தன் முடிவு செய்துள்ளார்.
அதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது, பாக்யலட்சுமிக்கு மற்றொரு நபருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
நேற்று முன்தினம் இரவு, பாக்யலட்சுமியின் வீட்டிற்கு ஞானசித்தன் சென்றார். இருவரும் சேர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது.
அப்போது, வேறொரு நபருடன் தொடர்பில் இருப்பதை கைவிடுமாறு ஞானசித்தன் கூறியுள்ளார். அதற்கு, 'நீ வேண்டுமானால் விலகிக்கொள், நான் அந்த நபரை திருமணம் செய்துகொள்ள போகிறேன்' என, பாக்யலட்சுமி கூறியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஞானசித்தன், பர்ஸ் ஒட்டுவதற்காக பயன்படுத்தப்படும் கடப்பா கல்லை எடுத்து, பாக்யலட்சுமியின் தலையில் ஓங்கி அடித்தார்.
இதில் படுகாயமடைந்த பாக்யலட்சுமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஞானசித்தன், சங்கர் நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து, ஞானசித்தனை கைது செய்த போலீசார், விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர்.

